பதினைந்து வயது மகளுக்கு தந்தையால் நேர்ந்த பாலியல் கொடூரம்: தாயாரும் உடந்தை?

0
216

மகளை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தையை எதிர் வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதிமன்ற நீதிவான் நிலந்த உத்தரவிட்டுள்ளார்.சுமார் இரண்டு வருடங்களாக 48 வயது தந்தை தனது 15 வயது மகளை துஷ்பிரயோக படுத்திய குற்றச்சாட்டில் நாவலப்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தையின் நடத்தை குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது தாயிடம் கூறியபோதும் தாய் அதனைக் கண்டு கொள்ளவில்லையெனவும் கூறப்படுகின்றது.

அதையடுத்தே மேற்படி சம்பவம் குறித்து சிறுமி தனது வகுப்பாசிரியரிடம் கூறியதாகவும் ஆசிரியை இது குறித்து சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு அறிவித்ததாகவும் சிறுமி பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேற்படி சம்பவம் குறித்து நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிவான் முன்னிலையில் முன்னிலைபடு்த்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here