பரிகார பூஜை என்ற பெயரில் 5 ஆண்டுகளாக பெண்ணொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் அவலஹள்ளி பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் ஆனந்தமூர்த்தி என்ற சாமியாரை சந்தித்துள்ளார்.
அப்போது பெண்ணின் குடும்பத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் பெரிய ஆபத்து ஏற்பட உள்ளதாகவும் உடனடியாக வீட்டில் சில பரிகார பூஜைகளை நடத்த வேண்டும் எனவும் அந்த சாமியார் கூறியுள்ளார்.
ஆனந்தமூர்த்தி சக்திமிக்க சாமியார் என பிரதேச மக்களால் கூறப்பட்டு வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் பரிகார பூஜைக்கு இணங்கி, சாமியாரை வீட்டுக்கு அழைத்துள்ளார். குறித்த நாளில் சாமியாரும் அவரது மனைவி லதா என்பவரும் பெண்ணின் வீட்டுக்கு சென்று பூஜையை ஆரம்பித்துள்ளனர்.
அப்போது தீர்த்தம் எனக் கூறி சாமியார் ஆனந்தமூர்த்தி போதைப் பொருளை வழங்கி பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதனை அவரது மனைவி லதா காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இந்த தகவல் வெளியில் தெரியவந்தால், காணொளியை வெளியிட்டு விடுவோம் என்ற அச்சுறுத்தியுள்ளனர். தொடர்ந்தும் காணொளியை காண்பித்து பல முறை வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, சாமியார் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.55