ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு சில வர்த்தகநிலையங்களில் கோழி முட்டை விற்பனை அதிகூடிய விலைக்கு விற்பனைக்கு விற்பனை செய்து வருவதாக பொது மக்கள் விசனம் தெரிக்கின்றனர்.
கோழி முட்டை ஒன்று 52 தொடக்கம் 55 வரை விற்பனை செய்து வருவதாகவும் இது குறித்த நுகவோர் அதிகார சபையின் அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லை என்றும் நுகவோர் குற்றம் சுமத்துகின்றனர்.
அரசாங்கம் முட்டையின் உச்சவிலையினை நிர்ணயம் செய்து வர்த்தமானி விலையிட்டுள்ள நிலையில் வர்த்தகர்கள் நாட்டில் உள்ள சட்டதிட்டங்களை மதிக்காது செயப்படுவதாகும் இதற்கு பிரதான காரணம் ஒரு சில விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் வர்த்தகர்களிடமிருந்து சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் ஒவ்வொரு மாதமும் பெற்றுக்கொள்ளுகின்றமையே காரணம் என ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்.
எனவே இதற்கு ஒரே வழி முட்டையினை கொள்வனவினை விலை குறையும் வரை தவிர்ப்பதை தவிர வேறு வழியில்லை பலர் சுட்டிக்காட்டிக்காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்