மட்டக்குளி துப்பாக்கி சூடு: இளைஞன் உயிரிழப்பு

0
173

மட்டக்குளியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மட்டக்குளிய, அலிவத்த பிரதேசத்தில் நேற்று (29) இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

26 வயதான ரணவக்க ஆராச்சிலாகே ஹசித சதுரங்க என அழைக்கப்படும் “அலிவத்தே ஹசித” என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here