எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

0
142

எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளது.அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக மேலதிக எரிபொருள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இனி நாளாந்தம் 4 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் மற்றும் மூவாயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் என்பன இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மேலும் 35 ஆயிரம் மெட்ரிக் தொன் 92 ஒக்டென் பெற்றோலைக் கொண்ட கப்பல் ஒன்றிலிருந்து தரையிறக்கும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டன எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here