நாளை நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ..

0
220

xமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (02) நாடு திரும்பத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பின்னர் மாலத்தீவு மற்றும் சிங்கப்பூர் வழியாக தாய்லாந்து சென்று சில வாரங்களை கழித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை அவர் அனுபவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் திரு.சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வுகள் நாளை இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here