நுவரெலியா கந்தப்பளையை சேர்ந்த கந்தப்பளை ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் வேலுசாமி ஆசைத்தம்பிக்கு அவரது சமூக சேவைகளை பாராட்டி தேசமானிய தேசபந்து எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனத்தின் ஊடாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு கருத்தரங்கு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் உட்பட சமூக சேவையில் அதிக ஈடுபாடு உடையவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்