18 மணித்தியால நீர் வெட்டு அமுல்

0
185

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று (03) காலை 08.00 மணி முதல் நாளை (04) அதிகாலை 02.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபை பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் ரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களுக்கும் குறித்த காலத்தில் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தளை நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகத்தின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாகவே நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here