கண்டி பேராதனை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி-கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பஸ் எதிர்திசையில் இருந்து வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளதோடு , முச்சக்கரவண்டி சாரதி உட்பட இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.