பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட க்லேன் எல்பின்வத்தை ஹிங்குருகமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானதோடு மேலும் பெண்ணொருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் தாயும் மகளும் பலியானதோடு, மேலும் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்கொலை சம்பவத்தில் பலியான இரண்டு பெண்களில் ஒருவர் 83 வயதுடையவர் என்பதுடன் மற்றையவர் 52 வயதுடைய குறித்த பெண்ணின் மகளாவார் .
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண்ணும் குறித்த கொலைசெய்யப்பட்ட பெண்ணின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்ம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, கொலைக்கான விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.