நானுஓயாவில் 35க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.நானூஓயா பகுதிக்கு உட்பட்ட முப்பந்தைந்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ரேஹா ஸ்டீல் ஹாட்வெயார் நிறுவனத்தின் பிரதானி திருச்செல்வம்(கண்ணா) ஊடாக உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
போஷாக்கான வாழ்வு எனும் தொனிப்பொருளில் போஷாக்கான உணவு பொருட்கள் அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர், நானூயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உட்பட நானூஓயா குடும்ப நல உத்தியோகத்தர் என பலர் பங்குபற்றுதலோடு இவ் உலர் உணவு பொருட்கள் கையளிக்கப்பட்டது.