மலையக மக்கள் முன்னணியின் , முன்னாள் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி.ஜி. இராஜகுலேந்திராவின் இறப்பு மலையக சமூகத்திற்கு பேரிழப்பு என மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் இரங்கல் செய்தியில் இராஜகுலேந்திரா மலையக மக்கள் முன்னணியின் உபதலைவராக இருந்த காலப்பகுதியிலும் அதேபோல மத்தியமாகாண சபையில் இருந்தபோதும் மலையக மக்களுக்கு நிறைய சேவைகளை ஆற்றியவர்.அதுமட்டுமல்ல மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர். மேலும் பிந்துனுவேவ படுகொலையின் போது பல தோட்ட பகுதி இளைஞர்களின் விடுதலைக்கு இலவசமாக போராடிய சட்டத்தரணியும் இவர் என்பதை நிச்சயம் ஞாபகப்படுத்திவேண்டிய தருணம் இது.
மலையகத்துக்கு பெரும் சேவை செய்து இன்று விண்ணுலகம் சென்றிருக்கும் அன்னாரின் ஆத்மா சாந்திக்கு பிரார்த்திப்பதாகவும் தன் இரங்கல் செய்தியில் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டிருந்தார்.