இலங்கை முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

0
201

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை (Maithripala Sirisena) எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் (16-09-2022) அழைப்பாணை வெளியிட்டுள்ளது.அருட்தந்தை சிறில் காமினி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஏசுதாசன் நடேசன் ஆகியோர் தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவினை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் கவனக்குறைவு தொடர்பான தனிப்பட்ட மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here