எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை..!

0
197

இரத்மலானை, பெலக்கடை சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (16) பிற்பகல் பணக் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு வந்த இனந்தெரியாத இருவர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை பயமுறுத்தி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சிறிய துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதத்தை வைத்து கொள்ளையர்கள் இருவரும் இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவிலும் பதிவாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் போது சுமார் 1,158,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here