கோழி இறைச்சியின் புதிய நிர்ணயிக்கப்பட்ட விலையை அகில இலங்கை கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி இன்று திங்கட்கிழமை முதல் ரூபா 1300 முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் சந்தைக்கு தொடர்ச்சியாக கோழி இறைச்சியை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதன் உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.




