தாயின் கீழ்த்தரமான செயற்பாட்டினால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்!

0
190

தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தாயாரின் பாதுகாப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, அவரை சிறுவர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here