பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாரதி; பயணிகளுக்கு நேர்ந்த அவலம்!

0
163

அவிசாவளையில் இருந்து கண்டி நோக்கி அதிவேகமாக பயணித்த தனியார் பேருந்தின் சாரதி இருக்கையின் கதவு உடைந்து கீழே விழுந்துள்ளார்.இந்த நிலையில் சாரதி சிகிச்சைக்காக கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வலக்கடை வளைவில் செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்து சுமார் ஐம்பது மீட்டர் தூரம் சென்றுள்ளார்.இதன் போது எதிரே வந்த கார் மற்றும் லொரி மீது மோதி, பின்னர் வீதியில் இருந்து கல்லின் மீது மோதி பேருந்து சாய்ந்துள்ளது.

எனினும் பேருந்தில் பயணித்த மக்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here