ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi ஆகியோருக்கிடையில் சந்திப் பொன்று இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் ஜப்பான் தலைநகர் டோட்டியோகில் இன்று இடம் பெற்றுள்ளது.அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi தெரிவித்துள்ளார்.
இதன்போது , இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் உதவுவதற்கு தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் கடந்த ஆட்சியில் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வருத்தம் தெரிவித்தார்.அந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் ஜப்பான் முதலீடு செய்வதை எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜப்பானின் முன்னாள் பிரதமர் Shinzo Abe இன் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.