பாடசாலை வளாகத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

0
202

புத்தளம் மணல்குண்டுவ முஸ்லிம் உயர்தரப் பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி 10 நாட்களுக்கு முன்னர் பாடசாலை முடிந்து ஓடும்போது பாடசாலை வளாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.மணல்குண்டுவ பகுதியைச் சேர்ந்த மொஹமட் பைசர் பாத்திமா ரஹ்னா என்ற 12 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். 11 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் அவர் 9 வது பிள்ளை என்று கூறப்படுகிறது.

சிறுமி ஓடும் வேளையில் மயங்கி விழுந்தவுடன் சுயநினைவின்றி இருந்ததாகவும் கூறப்படுகின்றது.அதிபரும் ஆசிரியர்களும் செயற்கை சுவாசம் கொடுத்து உயிர்பிழைக்க முயற்சித்த போதும் சிறுமி சுயநினைவின்றி இருந்துள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி
இதனையடுத்து சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

சிறுமிக்கு இதற்கு முன் எந்த நோயும் ஏற்படவில்லை என்றும், நலமுடனேயே இருந்ததாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here