பிரபல “ஹரி பொட்டர்” ஹாஸ்ய நடிகர் உலகை நீத்தார்.

0
241
உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற “ஹரி பொட்டர்” திரைக்காவியத்தின் “ஹெக்ரிட்” (Hagrid) கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் வழங்கிய புகழ்பெற்ற நடிகர் ரொபி கொல்ட்ரான் (Robbie Coltrane) நேற்று காலமானார்.

தனது 72 வது அகவைகள் காலமான ரொபி கொல்ட்ரானின் மறைவு மேற்கத்தைய சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய இராச்சியத்தில் பாரிய ஜனரஞ்சகத்தை கொண்டிருந்த ஹாஸ்ய நடிகரான அவர் கடந்த சில காலங்களாக உடல் நல குறைப்பாட்டால் அவதியுற்றிருந்தார்.

இந்தநிலையில், தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இவ்வுலகை நீத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here