கொழும்பில் சில பகுதிகளில் புதிய விதமான கொள்ளை நடவடிக்கை ஒன்று இடம்பெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதாவது, வீதிகளில் தகாத தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி, மக்களின் உடமைகளை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில், புறக்கோட்டை வீதியில் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
புறக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.