தொல்லை கொடுக்கும் முகப்பருக்கள்: இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள்

0
199

முகத்தைப் பளபளப்பாகப் பேணிக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல.ஆண்களுக்கும் உண்டு.

முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம்

அப்படி உடனடியாக முகப்பருக்களை நீக்க, சில வீட்டுக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

தொற்றுக் கிருமிகளை நீக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. குறிப்பாக இதில் இருக்கும் சல்ஃபர் முகப்பருக்களை நீக்கக் கூடியது.

பூண்டை அரைத்து அதன் சாறை பருக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள். முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகு பெறும்.

நெற்றி பகுதியில் முடி உதிர்வு! இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள்

வெள்ளரிக்காய்

சருமத்தை மென்மையாக்கக் கூடிய சக்தி வெள்ளிக்காயில் இருக்கிறது. இதில் வைட்டமின்கள் A, E மற்றும் C நிறைந்துள்ளன.

இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அதிகப்படியான எண்ணெயை நீக்கி முகப்பருக்களையும் முற்றிலும் நீக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். அல்லது தினமும் வெள்ளரிக்காய் ஊற வைத்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

கழுத்துக் கருமையால் அவஸ்தைப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா.. இலகுவில் விடுபட இதை மட்டும் செய்யுங்கள்

தேன்

தேன் பருக்களுக்கு சிறந்த நுண்ணுயிரியல் எதிர்ப்பாக இருக்கும்.

பஞ்சை தேனில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் மறைந்துவிடும்.

முடி உதிர்வால் கவலைப்படுகின்றீர்களா…இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள்

எலுமிச்சை சாறு

முகப்பருக்கள் வரக் காரணமான கிருமிகளை எலுமிச்சை முற்றிலும் அழித்துவிடும்.

எலுமிச்சை சாறைப் பிழிந்து, பஞ்சில் நனைத்து பருக்களின் மேல் ஒத்தி எடுங்கள்.

பருக்கள் உடைந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.

அப்பிள்

இதில் இருக்கும் சரும நன்மைகள் மிக அதிகம்.

இரவு தூங்கும்முன், பருக்கள் உள்ள இடத்தில் இதைத் தடவி காலை எழுந்து பார்த்தால் உங்களாலேயே நம்ப முடியாது.

அந்த அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

புதினா

இதில் இருக்கும் சாலிசிலிக் அமிலம் பருக்களை நீக்க உதவும்.

மூடியுள்ள சருமத் துளைகளை நீக்கும். இறந்த செல்களையும் நீக்கும்.

புதினாவை அரைத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here