ஓரினச் சேர்க்கையாளர்களை தாக்கும் குரங்கு காய்ச்சல்

0
173

மங்கி பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களில் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதன் ஊடாக குரங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களில் 99 சதவீதமானவர்களில் ஆண்கள் எனவும், அவர்களில் 95 சதவீதமானோர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டார்.

டுபாயில் இருந்து நாடு திரும்பிய 19 வயதான ஒருவருக்கே இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்போது மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அவருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here