4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை: 610 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற குற்றவாளி!

0
192

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒருவருக்கு 610 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா என்ற மாகாணத்தைச் சேர்ந்த 37 வயது மார்ட்டின் என்பவர் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு 3 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் 4 வயது குழந்தையை ஆபாச படங்கள் தயாரிக்க மார்ட்டின் முயற்சி செய்ததாகவும் மேலும் அவர் குழந்தைகள் ஆபாச படத்தை வைத்திருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டது

இதனை அடுத்து மார்ட்டினுக்கு 610 ஆண்டுகள் சிறை தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here