வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் வலுவடையக்கூடிய சாத்தியம்!

0
176

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்பில் காணப்படுகின்ற தாழமுக்கம் இன்று வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்கமானது நவம்பர் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்குக் கரையை அண்மிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலைநிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here