விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்வீக வீட்டைச் சூழ படையினர் புலனாய்வாளர்கள் குவிப்பு!

0
167

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் 26ஆம் திகதி அவரது பிறந்த தினம் என்பதால், மக்களால் பிறந்தநாள் கொண்டாடப்படும் என்ற நிலையிலேயே, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டைச் சூழவுள்ள பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினர், புலனாய்வு பிரிவினர் என பெருமளவில் குவிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தினை துப்பரவு செய்ய இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

இருப்பினும் இராணுவத்தின் தடைகளை மீறி துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, துப்பரவு பணிகளை மேற்கொண்டவர்களை இராணுவத்தினர் ஒளிப்படங்கள் எடுத்து, அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here