முன்னாள் அதிபரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் சுமார் பத்திற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குமான தேசியத் திட்டத்திற்கான நிகழ்வு தொடர்பான கூட்டம் கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தால் இன்று காலை நடத்தப்பட்டது.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டார். நூலில் முதல் பிரதி முன்னாள் அதிபருக்கு கையளிக்கப்பட்டது.
எனினும் பார்வையாளர்கள், எவருமின்றி வெற்று நாற்காலிகளே காட்சியளித்தன.குறைந்தபட்சம் பத்து பேர் கூட கூட்டத்திற்கு வரவில்லை. இருந்த போதிலும் பார்வையாளர் எவருமின்றி முன்னாள் அதிபர் இந்த நிகழ்வில் உரை நிகழ்த்தியுள்ளார்.