பசறை, லுணுகலை உட்பட்ட தோட்டப் பகுதிகளில் நேற்று இரவுமுதல் திடீரென வீசிவரும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குமாறு மாவட்ட அதிபருக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மாற்று இடங்களில் தங்கவைப்பதுடன் அவர்களுக்கான உலர் உணவுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு,சேதமடைந்த வீடுகளை சீர்திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும்
செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.
அத்துடன் இப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பாடசாலையை சீர்திருத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண செயலாளருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.