தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்ட இளம் குடும்பஸ்தர்- வாழமலை தோட்டத்தில் சம்பவம்

0
262

மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்‌ஷபான தோட்டத்தில், வாழமலை பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன்னை தானே கத்தியால் வெட்டிக்கொண்டுள்ளார்.

33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இவர் கத்தியால் தனது வயிற்று பகுதிக்கு குத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அதி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

 

நிருபர் – செ.தி.பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here