கொழும்பு 7 இல் குதிரைப் பந்தயத் திடலில் 23 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.
அவரது சடலம் இன்று (17) காலை மைதானத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தில் இருந்து பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது.
முகத்தில் பல காயங்கள் காணப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.