உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை இன்று (21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.
பிற்பகல் 01.30 மணி வரை ஒன்றரை மணித்தியாலங்கள் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலமாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன் பின்னர் இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை தேர்தல் அதிகாரிகள் அறிவிக்க உள்ளனர்.
வேட்புமனுத் தாக்கல் முடிந்தவுடன் தேர்தல் தினதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.