கடன் வாங்காதீர்கள் – அரசு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

0
143

கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.

அரசின் வரவு மற்றும் செலவு மதிப்பீட்டை விட குறைவாக இருப்பதால், அரசு செலவினங்களை குறைக்குமாறு அமைச்சர்கள் குழுவிற்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இவ்வருடம் ஜனவரியில் அரச வருமானச் செலவு, மதிப்பீட்டை விடக் குறைவாக இருந்ததால் அரச செலவினங்களைக் குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வருமானம் அனைத்து செலவுகளுக்கும் போதாது எனவும், சம்பளம் மற்றும் ஓய்வூதியம், நலன்புரி, மருந்துகள் மற்றும் கடன் சேவைகளை மட்டுமே ஈடுசெய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க நிறுவனங்களுக்கு கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிர்ப்பது மற்றும் அவற்றின் செலவுகளுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here