இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.