பாகிஸ்தானில் இணைய தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட மதம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை விக்கிப்பீடியாவில் இருந்து 48 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டுமென பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டது. ஆனால் விக்கிப்பீடியா எந்த கருத்துகளையும் நீக்கவில்லை.
அதனை தொடர்ந்து விக்கிப்பீடியாவை நேற்று பாகிஸ்தான் அரசு முடக்கியது. முறைப்பாடு அளிக்கப்பட்ட சர்ச்சையான கருத்துகளை அகற்றுவது மற்றும் மீண்டும் அதுபோல கருத்துகளை பதிவிடுவதை தடுப்பதாக உறுதியளித்தால் விக்கிப்பீடியாவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை தெரிவித்துள்ளது.