தைப்பூசத்தை முன்னிட்டு ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் தேர் பவனி இன்று சிறப்பாக இடம்பெற்றது.

0
309

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தின் தைப்பூசத்தினை முன்னிட்டு தேர் பவனி இன்று மின சிறப்பாக நடைபெற்றது,
இந்த தேர் பவனியினை முன்னிட்டு இன்று  (05) விநாயகர் வழிபாடு,திரவியஅபிசேகம், அலங்கார பூஜை, வசந்த மண்டபப்: பூஜை   உள்வீதியுலா ஆகியன இடம்பெற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேத வீதி உலா இடம்பெற்றது.

இந்த தேர் பவனி ஹட்டன் சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தில் ஆரம்பித்து ஹட்டன் சுற்றுவட்ட வீதி ஊடாக பண்டாரநாயக்க டவுன் வரை சென்று மீண்டும் திரும்பி பிரதான வீதி ஊடாக மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் ஆலயத்தினை வந்தடைய உள்ளது.

குறித்த தேர் பவனியினை முன்னிட்டு நேற்று (04) திகதி ஹட்டன் வில்பர்ட் டவுன் அம்மன் ஆலயத்திலிருந்து பால்குட பவனி இடம்பெற்றது.

நீண்ட இடைவெளிக்கு பின் இடம்பெற்ற இந்த தேர் பவனியில் காவடி,பறவைக் காவடி உள்ளிட்ட கலை கலாசார அம்சங்களும் இடம்பெற்றன.
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ சந்திராநந்த சர்மா ஆலய பிரதம குரு பாலசுப்பிரமணியம் சர்மா ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேர் பவனியில் பெரும் எண்ணிக்கையிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மலைவாஞ்ஞன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here