நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் பிரச்சாரத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது

0
169

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் பிரச்சாரத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும், தேர்தல் பிரச்சார ஆரம்பக்கூட்டமும் கொட்டகலை சீ.எல்.எப் மண்டபத்தில் நேற்று (06.02.2023) நடைபெற்றது.

இதன்போது, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், எம்.பியுமான மருதபாண்டி ராமேஸ்வரன், சிரேஷ்ட உறுப்பினர் அனுசியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், இ.தொ.காவின் உப தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என கட்சி செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 உள்ளுராட்சி சபைகளில் 7 சபைகளில் யானை சின்னத்திலும், 5 சபைகளுக்கு சேவல் சின்னத்திலும் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here