பாகிஸ்தானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவை எரிபொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் முறையாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை விநியோகம் செய்வதில்லை என பாகிஸ்தான் பெட்ரோலிய பொருட்களுக்கான விநியோகஸ்தர்கள் சங்கமும் குற்றம்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.