மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஹட்டன் மண்ணில் முதல் முறையாக மஹா சிவலிங்க ரத பவனி இன்று 13 காலை 9 மணியளவில் தலவாக்கலை சென் கூம்ஸ் தோட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த ரத பவனி அங்குள்ள சகல இந்து ஆலயங்களுக்கு சென்று அதனை தொடர்ந்து தலவாக்கலை, கொட்டகலை,ஹட்டன்,நோர்வூட் ,பொகவந்தலா,மஸ்கெலியா வட்டவளை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று நிறைவு பெறவுள்ளது.
இந்த நிகழ்வு 13 ம் திகதி தொடக்கம் 22 ம் திகதி வரை நடைபெறும் குறித்த நிகழ்வில் திரி மூர்த்தி சிவலிங்க தரிசனம்,பட விளக்க கண்காட்சி,மனக்குறை தீர்க்கும் மகா யாக குண்டம்.ஆகியன இடம்பெறவுள்ளன.
இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஹட்டன் பிரம்ம குமாரிகள் ராஜ யோக நிலையம் செய்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மானிடன் மறந்த இறைவன் மண்ணுக்கு வந்துள்ளார் மறக்காமல் வந்து தரிசனம் காண்டு இறையருளை பெருவதற்கு அனைவரையும் அழைக்கிறது பிரம்ம குமாரிகள் ராஜ யோக நிலையம்.
மலைவாஞ்ஞன்