நமது முகத்தின் அழகை தருவதிலும் கெடுப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பது உதடு.
பொதுவாக பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடுகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.ஆனால் நிறைய பேருக்கு சிவப்பு நிற உதடுகள் அமைவதில்லை. காரணம் அதிகப்படியான காஃபைன் மற்றும் புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
உதடுகளில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போதல், வறண்ட உதடு போன்றவை கருமைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதைத் தவிர சில உடல்நல பாதிப்புகளும் கருமை நிற உதடுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
இதனை தவிர்த்து உதடுகளை இயற்கை முறையில் கூட சிவப்பாக வைத்து கொள்ளலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
கற்றாழை ஜெல் பேஸ்ட்டை எடுத்து உதடுகளில் அப்ளே செய்து வாருங்கள். 10-15 நிமிடங்கள் கழித்து உதடுகளை கழுவி விடுங்கள். பிறகு உதட்டுக்கு மாய்ஸ்சரைசர் பாமை அப்ளே செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
1 டேபிள் ஸ்பூன் மாதுளை விதைகள், 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் ப்ரஷ் க்ரீம் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து உதடுகளில் 3 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்து வாருங்கள்.
பாதாம் பருப்பு பொடி மற்றும் பால் க்ரீம் இரண்டையும் கலந்து உதடுகளில் தடவி 3 – 5 நிமிடங்கள் காத்திருக்கவும். பாதாம் எண்ணெய்யை தினமும் உதடுகளில் தடவி வர சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.