சவூதி அரேபியா மகளிர் பிரீமியர் லீக் தொடரை வென்ற அல் நஸர் அணிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் அல் யமமஹ் அணியை எதிர்கொண்ட அல் நஸர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதன்மூலம் முதல் முறையாக சவூதி அரேபியா மகளிர் பிரீமியர் லீக் தொடரை வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய வீராங்கனைகள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர்.
في الـنـسـخـة الأولى 1️⃣
كـتـبـوا الـتـاريـخ ✍🏼
وحـققـوا اللـقـب 🏆🔵🟡 الـنـصـر بطلًا لـ #الدوري_الممتاز_للسيدات 2022-2023 pic.twitter.com/FZbLG0Ijbu
— إدارة الكرة النسائية – SAFF (@saff_wfd) February 11, 2023
ஆடவர் அல் நஸர் அணியில் விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாம்பியன் பட்டத்தை வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
Huge congratulations to @AlNassrFC_EN women’s team on their 1st league win. Such a fantastic achievement 🏆💛💙👏🏽 pic.twitter.com/X8kycfdqC0
— Cristiano Ronaldo (@Cristiano) February 12, 2023
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘முதல் முறையாக சவூதி அரேபிய லீக் தொடரை வென்ற மகளிர் அல் நஸர் அணிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். என்னவொரு அற்புதமான சாதனை’ என தெரிவித்துள்ளார்.