பொதுவாக தோல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளில் குதிக்கால் வெடிப்பும் ஒன்றாகும்.இந்த குதிக்கால் வெடிப்பானது அதிகம் வறட்சியால் ஏற்படுகிறதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால் இளம்வயதிலே பாதங்களில் வெடிப்பு ஏற்படுகின்றது.
பாதங்களில் உள்ள வெடிப்புகள் அழகைக் கெடுப்பதுடன் வலியையும் உண்டாக்கும்.இத்தகைய வலியைப் போக்கவும், வெடிப்பைப் போக்கவும் கருப்பு உப்பு சிறந்த தீர்வைத் தருகிறது. இதனை சரியான முறையில் பயன்படுத்தினால் எளிய முறையில் இதிலிருந்து விடுபட முடியும்.
தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
செய்முறை
ஒரு பக்கெட்டில் பாதி அளவு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும்.
அதில் சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பக்கெட் நீரில் உங்கள் பாதங்களை வைக்கவும். 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.மென்மையாக பாதங்களை ஸ்க்ரப் செய்யவும். தொடர்ந்து இப்படி செய்து வருவதால் பாத வெடிப்பின் காரணமாக உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்பு நிவாரணம் பெறுவதை உங்களால் உணர முடியும்.
மேலும், கருப்பு உப்பு உங்கள் பாதங்களைச் சுற்றியுள்ள இறந்த அணுக்களைப் போக்கி பாதங்களை மென்மையாக்கும்.