வாகன ஓட்டுநர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை!

0
168

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள உயர்வின் நன்மை எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது நுகர்வோருக்கு வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி விலை திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் எரிபொருளின் விலையில் நிச்சயமாக ஓரளவு குறையும் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளமையினால் கிடைத்த நன்மை இலங்கையிலுள்ள எரிபொருள் பாவனையாளர்களுக்கு வழங்கப்படுமா என வினவப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here