இலங்கையில் உச்சம் தொட்ட மரவள்ளிக்கிழங்கின் விலை

0
214

உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளின் சராசரி சந்தை விலைகள் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாவாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ குறைந்துள்ள போதிலும், இலங்கையில் மரவள்ளிக்கிழங்கு கிலோ ஒன்று 230 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சமீபகாலமாக நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 60 – 70 ரூபாய் வரை பரவலாகக் கிடைத்து வந்த ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கின் விலை மிகவும் அதிகரித்து நுகர்வோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் 200 ரூபா அல்லது அதற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கு இன்றைய தினங்களில் வீழ்ச்சியடைந்து வரும் பொருட்களின் விலைகளை ஒப்பிடுகையில் குறையாதது விசித்திரமான நிகழ்வு எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here