உலக குடிநீர் தினம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பல நிகழ்வுகள்

0
195

உலக குடிநீர் தினம் இன்று (22.03.2023) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கையிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இரத்மலானையில் நடைபெறவுள்ளது.

“நீர் மற்றும் துப்பரவேற்பாட்டு நெருக்கடியை தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின்கீழ் – அதனை வலியுறுத்தி இம்முறை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அத்துடன், நாட்டில் ஏனைய பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகளும், குடிநீர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பூமியில் வாழும் அனைத்து உயரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு தண்ணீர் அவசியம். இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22 ஆம் திகதி உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று முதல் வருடாந்தம் நீர் வளத்தின் முக்கியத்துவத்தையும் அதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மார்ச் 22 ஆம் திகதி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here