நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் உதயமாகியது

0
265

நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் இரண்டைச் சேர்ந்த சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழையமாணவ சங்கத்தின்
அங்குரார்ப்பனம் கூட்டமும் , சங்க உருவாக்கமும் அதிபரின் ஆலோசனைக்கமைய நாடு தழுவிய ரீதியில் பழையமாணவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு நடாத்தப்பட்டது.

இதன்போது தலைவராக அதிபர் V. தினகரன்,உப தலைவராக ஜெகநாதன்,செயலாளராக திருமதி சுதாஜினி ,உப செயலாளராக திரு சதீஷ்,பொருளாளராக திரு லோரன்ஸ் இவர்களுடன் இணைந்து செயல்பட
இன்னும் 12 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இக்குழுவின் ஊடாக எதிர்காலத்தில் பழையமாணவர்களை ஒன்றிணைத்தல்,பாடசாலையில் உள்ள சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்,பாடசாலையில் கல்வி கற்கும் வரிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தல், மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரித்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here