காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரட்சியால் நீர் தாழிரிக்கம் பல பகுதிகளில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வு.

0
238

மலையகத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காசல் ரி நீர்த்தேக்கத்தில் பாரிய அளவில் நீர் தாழிறங்கியுள்ளது.இந்த தாழிறக்கத்தினை அடுத்து பல பகுதியில் சட்டவிரோத மணிக்கல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் நீர்த்தேக்கத்தில் தோற்றும் பெற்றுள்ள குன்றுகளில் பாரிய அளவில் மாணிக்கல் அகழ்வு குழிகள் காணப்படுவதாகவும் இதனால் தேசிய நீர் மின் உற்பத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்கின்ற காசல்ரி நீர்த்தேக்கம் பாரிய அளவில் சூழல் சீர்கேட்டுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்த பாதுகாப்பு பிரிவினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
காசல் ரி நீர்;தேக்கத்தில் கனிசமான அளவு நீர் தாழிறங்கியுள்ளதனால் நீரில் மூழ்கி கிடந்த ஆலயங்கள் கட்டடங்கள்,மற்றும் வீதிகள் தற்போது தோற்றம் பெற்றுள்ளன.

மலையகப்பகுதியில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேகத்திங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதுடன் நீர் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. எனவே பொது மக்கள் நீரினை மிகவும் கவனமாக பயன்படுத்துமாறும்,நீர் நிலைகளை பாதுகாக்குமாறும் நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here