மலையகப்பகுதிகளுக்கு சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரித்து வருகின்றன. கடந்த சில தினங்களாக சீப்லேன் ஊடாக காசல் ரி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிகளுக்கு வெளி நாட்டு சுற்றுலா பிராயாணிகள் அதிக அளவில் வருகை தருவதாகவும் இதனால் சுற்றுலா விடுதிகளின் வருமானதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றன.
குறித்த சீ ப்லேன் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடைவைகள் வருகை தருவதாகவும்.குறித்த சீ ப்லேன்கள் காசல்ரி நீர்த்தேக்கத்தில் தலையிறக்கப்படுவதாகவும் இதில் குடும்பம் குடும்பமாக வருகை தருவதாகவும் இந்த சீ ப்லேன் தரையிரக்குவதை பார்வையிடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காசல் ரி பகுதிக்கு வருகை தருவதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக பொருளாதார நெருக்கடியினை சந்தித்து தற்போது சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரிப்பதன் காரணமாக இந்நியச் செவவாணி நாட்டில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றன.
மலையக பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளை கவரும் வகையில் சுற்றுலா பிரதேசங்களை அபிவிருத்தி செய்து சுற்றுலா பிரயாணிகளின் வருகையினை அதிகரிப்பதன் பலருக்கு வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க இது வழி வகுக்கும் என பலரும் தெரிவிக்கின்றனர்.
எனவே மலையகப்பகுதியில் காணப்படும் உள்ளுராட்சி மன்றங்கள் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளை அதிகரிக்கும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து அதன் ஊடாக பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்.