கொட்டகலை பிரதேச சபையின் கீழுள்ள கொமர்சல் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நீர்த் தேக்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அமரர் ஆறுமுகன் தொண்டமானால் அடிக்கல் நாட்டப்பட்டு 2014ம் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் அத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் அத்திட்டம் 2021 மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கான வேண்டுகோளை, நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் மருத பாண்டி ராமேஸ்வரன், கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜாமணி பிரசாந்த் ஆகியோர் விடுத்திருந்தனர்.
இதன் முதல் கட்ட நிகழ்வாக மிதக்கும் படகுச் சேவை அமைச்சர் ஜீவன் தொண்டமானால் நேற்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது முன்னாள் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜாமணி பிரசாந்த் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணி பொதுச் செயலாளர் அர்ஜூன் ஜெய்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.