இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவும் அபாயம்! வைத்தியர்கள் எச்சரிக்கை!

0
174

இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவும் அபாயம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இன்புளுவன்சா தொற்று குறித்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இன்புளுவன்சா தொற்றுக்கு இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவு உள்ள பகுதிகளில், தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் பண்டிகைக் காலங்களில் சன நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here