சித்திரை புத்தாண்டினை கொண்டாடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான உள் நாட்டு சுற்றுலா பிரயாணிகள் நேற்றும் இன்றும் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர்
சுற்றலா பிரயாணிகளின் வருகையால் டெவோன், சென்கிளையார் போன்ற நீர் வீழ்ச்சி பகுதிகளில் உள்ள காட்சிக் கூடங்களில் சுற்றுலா பிரயாணிகள் நிறைந்து காணப்படுகின்றன.
குறித்த பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் வந்து செல்வதனால் போக்குரத்து நெரிசலினை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுற்றலா பிரயாணிகளின் அதிகரித்த போதிலும் நடைபாதை வர்த்தகம் சூடு பிடிக்கவில்லை என நடை பாதை வர்த்தகத்தில் ஈடு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு சில வர்த்தகர்களுக்கு வியாபாராம் சுமூகமாக நடைபெற்ற போதிலும் பழ விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள்; மா, கொய்யா, அன்னாசி போன்றவற்றின் விலைகள் அதிகரித்து காணப்படுவதனால் தாங்கள் வியாபாரத்தினை இழந்துள்ளதாகவும் சுற்றுலா பிரயாணிகள் அதிகரிக்கும் போது நாள் ஒன்றுக்கு சுமார் 150 மாம்பழங்கள் விற்பனை செய்வதாகவும் தற்போது ஆறு மாம் பழங்களை இரண்டு நாட்களில் கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்;
எது எவ்வாறான போதிலும் நாட்டு மக்கள் பொருளாதாரத்தில் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதனால் அத்தியவசிய தேவைக்களுக்கு மாத்திரம் செலவழித்து வருகின்றனர்;
மலைவாஞ்ஞன்